← முகப்பு செய்திகள்

ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும்
‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ படம் மே 27 ஆம் தேதி வெளியீடு

ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும். ஜியோஹாட்ஸ்டாரின் ‘உப்பு புளி காரம்’, ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘ரிசார்ட்’ ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு படமாக ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது. இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் வியாபார குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (நடிகர் போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். பின்னர், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர். நகைச்சுவை மற்றும் எமோஷனலான இந்த புரோமோக்கள் மற்றும் அன்னையர் தினத்தில் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜியோஹாட்ஸ்டாரின் நீளமான ஒரிஜினல் தொடர்களை தொடர்ந்து ரசித்து வரும் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், புதிய குடும்ப ரசிகர்களையும் இந்த தொடரின் புரோமோ கவர்ந்துள்ளது. போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் தொடரை, ’உப்பு புளி காரம்’ மற்றும் ’போலீஸ் போலீஸ்’ போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதை தொடும் தருணங்களை கொண்டுள்ள ’பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் வாரந்தோறும் ரசிக்கத்தக்க தொடராக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று ஜியோஹாட்ஸ்டாரில் மே 27 முதல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav shows incredible sportsmanship by congratulating and hugging Shreyas Iyer on
07 Jun 2026
செய்திகள்
Vaibhav Sooryavanshi was allowed to accompany his parents on the Ireland and
07 Jun 2026
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
‘ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்’: தகிக்கும் வெயிலில் ஜவுளி தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னை – பிபிசி கள ஆய்வு
23 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
2 மணி நேரம் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net