← முகப்பு பதிவு

ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 34 பார்வைகள்
ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் கம்பஹாவில் ஆரம்பம்

ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை கம்பஹாவில் இருந்து ஆரம்பிப்போம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமரசம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்க்கட்சியினர் கம்பஹா ஜாஎல பிரேதேசத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையா்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி பாரியளவில் அதிகரிக்கும் என நான் கடந்த பெப்ரவரி மாதத்தில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தேன். அதேபோன்று விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. ஏனெனில் இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க தெரியாது.

ஊழல் மோசடியை இல்லாமலாக்குவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்தார்கள். தற்போது வாகனங்களுக்கான வரி அதிகரிப்பின் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கிறது.

வரி அதிகரிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தனக்கு தேவைையானவர்களுக்கு அது தொடர்பான அனைத்து தவகல்களையும் வழங்கவிட்டு, எதுவும் தெரியாதுபோன்று செயற்படுகிறார்.

அதனாலே வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு வர்த்தமானி வெளிவருவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் 4 ஆயிரம் வாகனங்களுக்கு வங்கி கடன் பற்றுப்பத்திரம் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாகனங்கள் மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட சிலருக்கு கொமிசன் இருக்கிறது. இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணம் பெலவத்தை கணக்கிற்கு செல்வதை இடமளிக்க முடியாது. அதனால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். அதனை தவிர்க்க முடியாது.

அன்று நாடு வீழ்ச்சியடைந்தபோது, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கட்சி பேதமின்றி நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கி, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். அன்று நாங்கள் செய்த அர்ப்பணிப்பு காரணமாக எமது தலைவர்கள் பலர் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் 6 மாதங்கள் செல்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை மீணடும் கொண்டுவரும் நிலையே இருக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net