← முகப்பு செய்திகள்

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 36 பார்வைகள்
கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில்
கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி முதல்வர் விஜய் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறி விப்பைத் தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்கும் இந்த பலனை நீட்டிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுப் பணியாளர் களுக்கு கடந்த 01.01.2026 முதல் அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள கோயில்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும்.

பகுதி நேரப் பணியாளர்கள், தினக் கூலிப் பணியாளர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பணியிடங்களில் உள்ளவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது. கோயில் நிதி நிலைமைக்கு ஏற்ப, உரிய விதி முறைகளைப் பின்பற்றி இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தனசேகர் கூறுகையில், “கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி” என்றார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
4 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்
21 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?
21 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்மையா?
50 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில் எல்ஐசி செய்த பெரும் முதலீடால் எழும் கேள்விகள்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை காப்பாற்றிய பெண் விமானி
2 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழக
செய்திகள் · 4 நிமிடங்கள் முன்னர்
3
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட
செய்திகள் · 21 நிமிடங்கள் முன்னர்
4
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன
செய்திகள் · 21 நிமிடங்கள் முன்னர்
5
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்ம
செய்திகள் · 50 நிமிடங்கள் முன்னர்
6
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில்
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே சூடுபிட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net