← முகப்பு தமிழ்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தில் Magneto tellyurics audio frequency என்ற ஸ்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 80 பார்வைகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம்

1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை வியாழக்கிழமை (14) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் திறந்த மன்றிலே அழைக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமுகமளித்திருந்தனர்.

அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு பல்வேறு தரப்பினர் விஜயம் செய்திருந்தனர்.

இந்நிலையில் சடுதியாக மழை குறிக்கிட்டதன் நிமித்தம் கள ஆய்வினை முன்கொண்டு செல்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. இதனால் மீண்டும் குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (15) திறந்த மன்றிலே அழைக்கப்பட்டது.

இதன்போது மனிதப் புதைகுழிப் பகுதியில் Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறையை பயன்படுத்த மன்று அனுமதி வழங்கி கட்டளையாக்கியிருக்கிறது.

இந்த அடிப்படையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஸ்கேனிங் பொறிமுறைகளை ஆரம்பிக்கின்றனர்.

குறித்த இந்த வழக்கானது மீண்டும் மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (18) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது என குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் ரவூப் அப்துல் மஜீத் சார்பாக ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net