காசா பகுதியை நோக்கிய சர்வதேச மனிதாபிமான உதவிப் படகுப் பேரணியில் பங்கேற்றிருந்த சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இது தொடர்பான விபரங்களை வழங்கினார்.
“காசா நோக்கிச் சென்ற படகுப் பேரணியில் பயணித்த இலங்கை பிரஜையான சமீரா மெஹபூப்தீன் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, அந்தப் படகுப் பேரணி இஸ்ரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு, அதிலிருந்த பல நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, டெல் அவிவ் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இஸ்ரேலிய அதிகாரிகளிடம் சமீராவை நேரில் சந்திப்பதற்கான தூதரக அணுகலை உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளோம். அவரது தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கான சட்டப்பூர்வ மற்றும் நடைமுறை அம்சங்களைச் சரிபார்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
“இந்த படகுப் பேரணி இடைமறிக்கப்பட்டமை குறித்து தற்போதைய கட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு அவசர முடிவுகளையும் எடுக்க விரும்பவில்லை. எனினும், எத்தகைய சூழ்நிலையிலும் சம்பந்தப்பட்ட இலங்கை பிரஜையின் பாதுகாப்பு, நலன், சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று