← முகப்பு செய்திகள்

களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (16)

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 8 பார்வைகள்
களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (16)
களு, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல்!

களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (16) பதிவான மழைவீழ்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் களு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவே நேற்று தாழ்நிலப் பகுதிகளில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சியாகும்.

அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை என்பவற்றில் சில இடங்களில் 60 முதல் 70 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஏனைய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் மழைவீழ்ச்சியானது 25 மில்லிமீற்றருக்கும் குறைவாகவே காணப்பட்டது.

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் தற்போது உயர்மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அது மெதுவாகக் குறைவடைந்து ‘அவதான நிலையை’ எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் நீர்மட்டம் இன்னும் ‘சிறிய அளவிலான வெள்ள’ மட்டத்திலேயே காணப்படுகின்றது.

இதன்படி தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் ஆறுகளின் நீர்மட்டம் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
5 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்
22 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?
22 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்மையா?
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில் எல்ஐசி செய்த பெரும் முதலீடால் எழும் கேள்விகள்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை காப்பாற்றிய பெண் விமானி
2 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழக
செய்திகள் · 5 நிமிடங்கள் முன்னர்
3
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட
செய்திகள் · 22 நிமிடங்கள் முன்னர்
4
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன
செய்திகள் · 22 நிமிடங்கள் முன்னர்
5
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்ம
செய்திகள் · 51 நிமிடங்கள் முன்னர்
6
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில்
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே சூடுபிட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net