← முகப்பு செய்திகள்

கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 8 பார்வைகள்
கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம்
கலைப்புலி தாணு ‘கங்கணம்’ பட பதாகையை வெளியிட்டார்

கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்கணம்’. அ.இசையரசன் இதன் கதை எழுதி இயக்கியுள்ளார். தேசிய நாடகப்ப பயற்சிப்பள்ளி மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் பயிற்சி பெற்ற இவர், ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்தை இயக்கி ஐந்து விருதுகளையும் பெற்றவர். இப்படத்தில் கதாநாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி சந்திரசேகர், பிராணா ஆகியோர் நடிக்கின்றனர்.. முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். நடிகர் சம்பத்ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ் மற்றும் சிரஞ்சன் கே.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, செல்வா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை தமீம் அன்சாரி அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜி.ஏ.சிவசுந்தர் கவனிக்க, படத்தொகுப்பை ஜோ.ஜெயபாலன் மேற்கொண்டுள்ளார். நடனத்தை தினா மற்றும் ஜாய் மதி கவனித்துள்ளனர். .படம் குறித்து இயக்குநர் இசையரசன் கூறும்போது, “தன் குடும்பத்தில் வில்லனால் ஏற்பட்ட கொடூரத்திற்காக கதாநாயகனும், தனக்கு வில்லனால் ஏற்பட்ட உச்சகட்ட அவமானத்திற்காக சரவணனும், தன் மக்களுக்கு நிகழும் அடக்குமுறைக்கும் வன்கொடுமைக்காகவும் தலித் இளைஞர்கள் ஒரு குழுவாகவும். மூன்று துருவங்களாக பழி தீர்க்க முயற்சிப்பதை சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். இதன் படப்பிடிப்பு மேலூர், தேனி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 56 நாட்கள் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் நாடக கலைஞர்கள் பூமி ராஜன், பந்தா பசுபதி ஆகியோரை பயன்படுத்தியுள்ளோம்.. விரைவில் இப்படத்தின் வெளியீடு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர், நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி மற்றும் தஞ்சாவூர் மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் டாக்டர் எஸ். ஆசிப் அலி ஆகியோர் அடுத்தடுத்து ‘கங்கணம்’ படத்தின் பதாகைகளை வெளியிட இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav shows incredible sportsmanship by congratulating and hugging Shreyas Iyer on
07 Jun 2026
செய்திகள்
Vaibhav Sooryavanshi was allowed to accompany his parents on the Ireland and
07 Jun 2026
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
‘ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்’: தகிக்கும் வெயிலில் ஜவுளி தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னை – பிபிசி கள ஆய்வு
23 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
2 மணி நேரம் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net