← முகப்பு தலையங்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே

🕐 12 Mar 2026 📂 தலையங்கம் 98 பார்வைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

உலகளவில் எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான கடல் பாதையாக விளங்கும் இந்த ஜலசந்தியில் ஏற்பட்ட அச்சுறுத்தலால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சியுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி வழங்க ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது.

எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களை இந்த கடல் பாதை வழியாக இந்தியாவுக்கு அனுப்பலாம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 45 சதவீதம் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் இந்த கடல் பாதையை பயன்படுத்துகின்றன.

மேலும் செய்திகள்
தலையங்கம்
இலங்கையின் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை வி
12 Jun 2026
தலையங்கம்
பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வால் எல்-நினோ நிலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வெப்ப அலை,
12 Jun 2026
தலையங்கம்
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் அண்மையில் நடை
42 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
பாலியல் கடத்தல் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கி, கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையிலேயே
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான மங்கலான கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள், விண்வெளியில் ஏலிய
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
மத்திய கிழக்குப்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் தவ
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net