← முகப்பு செய்திகள்

FIFA World Cup 2026: Seventeen-year-old Mexican prodigy Gilberto Mora made football history

🕐 12 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
FIFA World Cup 2026: Seventeen-year-old Mexican prodigy Gilberto Mora made football history

மெக்சிகோ சிட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணியின் 17 வயது இளம் வீரர் கில்பர்டோ மோரா களம் கண்டதன் மூலம் 96 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் மெக்சிகோ அணிக்காக விளையாடிய மிகக் குறைந்த வயது வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கில்பர்டோ மோரா மாற்று வீரராகக் களமிறங்கினார்.

FIFA World Cup 2026 Mexico s Gilberto Mora Breaks 96-Year-Old World Cup Record Against South Africa

தற்போது 17 வயது 240 நாட்களே ஆகும் மோரா, இதற்கு முன்பாக 1930ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் மெக்சிகோவின் மானுவல் ரோசாஸ் (18 வயது 134 நாட்கள்) படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 96 ஆண்டுகளாக யாருக்கும் எட்டாத இந்த அரிய சாதனையை இந்த இளம் வீரர் தகர்த்தெறிந்துள்ளார்.

மெக்சிகோவின் சியாபாஸ் நகரில் பிறந்த மோரா, கிளப் டிஜுவானா அணியின் அகாடமி மூலம் கால்பந்து உலகிற்கு அறிமுகமானார். 17 வயதே ஆன போதிலும், உள்ளூர் லீக் போட்டிகளில் அந்த அணிக்காக 50க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி கோல் மற்றும் அசிஸ்ட்களை வழங்கி முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரது திறமையைக் கண்டு வியந்த மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஜாவியர் அகுய்ரே, உலகக் கோப்பைக்கான அணியில் இவருக்கு வாய்ப்பளித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் மெக்சிகோவின் சீனியர் தேசிய அணியில் அறிமுகமான மிகக் குறைந்த வயது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். மேலும், மெக்சிகோ அணி கோல்டு கோப்பை வெல்லவும் இவர் முக்கிய பங்காற்றினார். 2026 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களிலேயே மிகக் குறைந்த வயது வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

FIFA உலகக் கோப்பை கால்பந்து.. முதல் போட்டியிலேயே 3 ரெட்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

ஒருவேளை இந்த உலகக் கோப்பை தொடரில் மோரா கோல் அடித்தால், பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு (17 வயது 239 நாட்கள்) அடுத்தபடியாக உலகக் கோப்பை வரலாற்றில் கோல் அடித்த 2வது மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் 25 நிமிடங்கள் மட்டுமே விளையாடினாலும் கில்பர்டோ மோரா மெக்சிகோ கால்பந்து வரலாற்றில் தனது பெயரை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net