← முகப்பு தலையங்கம்

கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான மங்கலான கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள், விண்வெளியில் ஏலிய

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 2 பார்வைகள்
கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான மங்கலான கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள், விண்வெளியில் ஏலிய
உலகையே உலுக்கிய ‘ஏலியன் பிரேதப் பரிசோதனை’ வீடியோ: Roswell விசித்திரத்தின் பின்னணி!

கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான மங்கலான கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள், விண்வெளியில் ஏலியன்கள் (வேற்றுக்கிரகவாசிகள்) இருக்கிறார்கள் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்தன. கடந்த 1947-ல் அமெரிக்காவின் ரோஸ்வெல் (Roswell) பகுதியில் விண்கலம் விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட ஏலியன் ஒன்றின் உடலை ராணுவ மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்வது போல அந்த வீடியோ அமைந்திருந்தது. முப்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் உலக வரலாற்றின் மிகப்பெரிய மர்மமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகளை, அண்மையில் வெளியான ‘தி ஏலியன் அப்டாப்சி ஸ்கேண்டல்’ (The Alien Autopsy Scandal) என்ற புதிய ஆவணப்படம் முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த 18 நிமிட வீடியோ முதன்முதலில் வெளியான போது உலகளாவிய ஊடகங்களில் ஒரு காட்டுத்தீ போலப் பரவியது . அமெரிக்காவின் ஃபாக்ஸ் டிவி (Fox TV) மற்றும் பிரிட்டனின் சேனல் 4 உள்ளிட்ட முன்னணித் தொலைக்காட்சிகள் இதனைப் போட்டிப் போட்டுக் கொண்டு ஒளிபரப்பின. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ராணுவ ஆய்வாளர்கள் கூட இந்த வீடியோவை உண்மை என்றே நம்பினர். “நாம் பிரபஞ்சத்தில் தனியாக இல்லை” என்ற மனிதகுலத்தின் நீண்ட நாள் தேடலுக்கு இந்த வீடியோ ஒரு மிகப்பெரிய சான்றாகப் பார்க்கப்பட்டு, வரலாற்றின் மிக முக்கியமான பதிவாக அன்றைய காலகட்டத்தில் கொண்டாடப்பட்டது.

ஆனால், பல ஆண்டுகள் நீடித்த தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த வீடியோ முற்றிலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் ‘போலி’ (Hoax) என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ அமெரிக்காவின் அதிமுக்கிய ராணுவத் தளத்திலோ அல்லது நியூ மெக்சிகோ பாலைவனத்திலோ படமாக்கப்படவில்லை. மாறாக, லண்டனின் கேம்டன் (Camden) நகரில் உள்ள ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ரே சாண்டிலி (Ray Santilli) மற்றும் கேரி ஷோஃபீல்ட் (Gary Shoefield) என்ற இரு பிரிட்டிஷ் தொழிலதிபர்களால் இது ரகசியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் இதன் கேமராமேனை நேரில் சந்திக்கக் கோரிய போது, இவர்கள் லண்டன் வீதியில் இருந்த ஒரு வீடற்ற நபரை அழைத்து வந்து, அவருக்கு முகச்சவரம் செய்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போல நடிக்க வைத்த கூத்தும் அம்பலமாகியுள்ளது.

மிகவும் துணுவக்கமாகத் தயாரிக்கப்பட்ட இந்த போலி ஏலியன் உடலை உருவாக்குவதற்காக ‘டாக்டர் ஹூ’ (Doctor Who) தொடரில் பணியாற்றிய ஒரு பிரபல சிற்பி பயன்படுத்தப்பட்டுள்ளார். ஏலியனின் உடலுக்குள் உண்மையான மனித உறுப்புகள் போலக் காட்டுவதற்காக, கசாப்புக் கடையிலிருந்து வாங்கப்பட்ட ஆட்டின் மூளை, பன்றியின் இதயம் மற்றும் கோழியின் குடல்கள் ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. மேலும், பிரேதப் பரிசோதனையின் போது வடியும் இரத்தம் உண்மையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ‘ராஸ்பெர்ரி ஜாம்’ (Raspberry Jam) பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வளராத 90களின் காலகட்டத்தில், வெறும் விலங்கு உறுப்புகளையும் ஜாமையும் கொண்டு ஒட்டுமொத்த உலகையே முட்டாளாக்கிய இந்தச்சம்பவம் விண்வெளி வரலாற்றின் மிக விசித்திரமான ஏமாற்று வேலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது .

மேலும் செய்திகள்
தலையங்கம்
இலங்கையின் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை வி
12 Jun 2026
தலையங்கம்
பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வால் எல்-நினோ நிலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வெப்ப அலை,
12 Jun 2026
தலையங்கம்
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் அண்மையில் நடை
44 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
பாலியல் கடத்தல் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கி, கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையிலேயே
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
மத்திய கிழக்குப்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் தவ
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
நினைத்துப் பார்க்கவே முடியாத சம்பவங்கள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. நார்வே நாட்டின் ஸ்டவங்கர் (Stavanger) பக
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net