← முகப்பு தலையங்கம்

உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் மிக சக்திவாய்ந்த அமைப்பான அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘பெடரல் ரிசர்வ்’ (US

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 32 பார்வைகள்
உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் மிக சக்திவாய்ந்த அமைப்பான அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘பெடரல் ரிசர்வ்’ (US
அமெரிக்காவில் புதிய அதிரடி: பெடரல் ரிசர்வ் தலைவராகக் கெவின் வார்ஷ் பதவியேற்பு; டிரம்ப் கொடுத்த ‘சுதந்திர’ உத்தரவு!

உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் மிக சக்திவாய்ந்த அமைப்பான அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘பெடரல் ரிசர்வ்’ (US Federal Reserve) அமைப்பின் புதிய தலைவராகக் கெவின் வார்ஷ் (Kevin Warsh) இன்று (மே 22, 2026) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் (White House East Room) நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ், கெவின் வார்ஷிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 1987-ஆம் ஆண்டுக்குப்பிறகு, சுமார் 40 ஆண்டுகள் கழித்து பெடரல் ரிசர்வ் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகையில் பதவியேற்பது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

முன்னாள் தலைவர் ஜெரோம் பவலுக்கு (Jerome Powell) மாற்றாக, அதிபர் டொனால்ட் டிரம்பால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டவர் 55 வயதான கெவின் வார்ஷ். கடந்த ஓராண்டிற்கும் மேலாக, அமெரிக்காவில் வட்டி விகிதங்களைக் குறைக்க மறுத்த ஜெரோம் பவலை அதிபர் டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்து வந்ததோடு, அவரை பதவியிலிருந்து நீக்கப் போவதாகவும் அச்சுறுத்தி வந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவாகப் பேசி வந்த கெவின் வார்ஷ், தற்போது பெடரல் ரிசர்வ் வங்கியின் 4 ஆண்டுகால தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பதவியேற்பு விழாவில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், கெவின் வார்ஷ் முழுமையான சுதந்திரத்துடன் (Totally independent) செயல்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறி வியப்பை ஏற்படுத்தினார். “அவர் முற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட்டு மிகச் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; வட்டி விகிதங்கள் குறித்து முடிவெடுக்கும் போது அவர் என்னை நோக்கவோ அல்லது வேறு யாரையும் பார்க்கவோ தேவையில்லை; தனக்குச் சரி என்று படுவதை அவர் செய்யட்டும்” என்று டிரம்ப் மேடையில் குறிப்பிட்டார். இருப்பினும், மத்திய வங்கியின் சுதந்திரத்தை டிரம்ப் தன் அதிகாரத்தால் கட்டுப்படுத்த முயல்வதாக டெமாக்ரடிக் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் ஈரான் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்றுள்ள கெவின் வார்ஷ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு அமெரிக்கக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே தனது முதல் இலக்கு என்று உறுதியளித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும், உலக சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பேண புதிய பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் எடுக்கப் போகும் அடுத்தடுத்த பொருளாதார முடிவுகளை வால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்
08 Jun 2026
தலையங்கம்
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணமாக, இன்று (8) முதல் பேருந்து சேவைகளைக்
7 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர்
11 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திய நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும்
35 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய
45 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அண்மையில் அடுத்தடுத்து அரங்கேறிய சாதிய வன்முறைத் தாக்குதல்கள் தமிழக அளவி
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net