← முகப்பு செய்திகள்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

🕐 03 May 2026 📂 செய்திகள் 198 பார்வைகள்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மாலைதீவு மாலே நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-116 என்ற விமானம் மூலம் இன்று மாலை 5:33 மணியளவில் அவர் கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் மாலைதீவின் முதல் பெண்மணி மற்றும் 20 உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மாலைதீவு ஜனாதிபதி நாளை முதல் நாட்டில் பயணத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி மீண்டும் மாலைதீவு நோக்கிப் புறப்படவுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net