← முகப்பு செய்திகள்

ஈரான் போரின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் உரையாட

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
ஈரான் போரின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் உரையாட
டிரம்ப் மீது இஸ்ரேல் பிரதமர் அதிருப்தி

ஈரான் போரின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் உரையாடினார்கள். 1 மணி நேரம் நடந்த இந்த உரையாடல் பதற்றமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை மீண்டும் தொடங்குவதற்கு பதிலாக ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆதரிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உரையாடலுக்கு பிறகு அமெரிக்க அதிபர் மீது நெதன்யாகு கடும் அதிருப்தி அடைந்தார். அவர் கோபம் அடைந்ததாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் பிரதமரை பொறுத்தவரை ஈரானை மேலும் சீர்குலைக்கவும், முக்கிய உள்கட்டமைப்புகளை அழித்து ஆட்சியை பலவீனப்படுத்தவும், தாக்குதல்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறார். இதை அவர் டிரம்பிடம் வலியுறுத்தினார். ஆனால் டிரம்ப்போ பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க விரும்பினார் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net