← முகப்பு பதிவு

இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 14 பார்வைகள்
இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி
மீண்டும் வங்குரோத்து?

இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எதிர்கால மாதாந்த முன்னறிவிப்புகளை வெளியிடுவது கடினமாக உள்ளதாகவும், நிலைமைகள் மிக வேகமாக மாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவைக் காட்டிலும் இலங்கைக்கு அச்சுறுத்தல் அதிகம் .700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவிலேயே, பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய நெருக்கடி தொடர்ந்தால், குறைந்த கையிருப்புள்ள இலங்கை போன்ற நாடுகள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும்.

இந்தியா ஏற்கனவே தனது அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய) ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கையிலும் அத்தியாவசியமற்ற எரிபொருள் பாவனையைக் குறைப்பது கட்டாயமாகும் . இந்தியாவைப் போன்று இலங்கையிலும் அரச ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து நிதி அமைச்சு அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net