இந்திய பிரதி உயர்ஸ்தானிகராக மைத்ரே குல்கர்னி நியமனம்
இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகராக மைத்ரே குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
மைத்ரே குல்கர்ணி தற்போது இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகராக பணியற்றிவரும் நிலையிலேயே அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய கலாநிதி சத்யஞ்சல் பாண்டே தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்து கொண்டு பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.