← முகப்பு தமிழ்

(இராஜதுரை ஹஷான்)யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த தினத்தை ஒருபோதும் மறக்ககூடாது. இன்று

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 84 பார்வைகள்

யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த தினத்தை ஒருபோதும் மறக்ககூடாது. இன்று பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கமாகவும் உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்த, இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.Beaches & Islands

இந்நிழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தம் முடிவடைந்த இந்த தினத்தை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த வெற்றி நாளை ஒருபோதும் மறக்கக்கூடாது. இன்று இலங்கை பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.

அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது. ஆனால் மக்கள் நல்லிணக்கமாக உள்ளார்கள். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. யுத்த வெற்றிக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் என்றும் நினைவுகூரப்படவேண்டும். அவர்களால் தான் இன்று நாடு ஐக்கியமாக உள்ளது. இது பாரியதொரு வெற்றியாகும் என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net