← முகப்பு தமிழ்

(இராஜதுரை ஹஷான்)பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் ப

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 96 பார்வைகள்

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஆக்கப்பட்ட இந்த சட்டமூலம், கடந்த வெள்ளிக்கிழமை (15) அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கும், அது தொடர்பான அல்லது அதற்கு அனுகூலமான விடயங்களுக்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காகவும் இந்தச் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது.

'2026 பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்கும் சட்டம்' என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நீக்கப்படும்.

இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் நாள் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை வகிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், அந்தப் பதவியை வகிக்கும் நபர் ஆயுதப் படைகளில் அவர் சார்ந்த சேவைப் பிரிவிற்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும்.

இச்சட்டம் அமலுக்கு வருவதோடு, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும், பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்பட வேண்டும் என அந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net