← முகப்பு பதிவு

இன அழிப்பின் நினைவேந்தல் நாளிற்கு முன்னதாக தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு சண்டை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.நேற

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 72 பார்வைகள்
இன அழிப்பின் நினைவேந்தல் நாளிற்கு முன்னதாக தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு சண்டை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.நேற
தமிழரசு குடுமிப்பிடி!

இன அழிப்பின் நினைவேந்தல் நாளிற்கு முன்னதாக தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு சண்டை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கைகலப்புக்கள் வரை அரசியல் கதிரை இழுபறி சென்றுள்ளது.

இந்நிலையில் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள்ளே எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தாலும் அத்தீர்மானம் உரிய முறையில் அறிவிக்கப்படாவிட்டால் அது திரிபு படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் அமைப்பு பேரவையில் அரசாங்கத்திற்கு சாதகமாக செயற்ப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக அவருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்.

எனவே அந்த பதவியிலிருந்து கட்சியையும் சங்கடப்படுத்தாமல், அவரும் சங்கடப்படாமல் ராஜினாமா செய்யுமாறு கட்சியின் அரசியல் குழு கடிதம் அனுப்பியிருந்தது. அதில் அவர் இணங்காத காரணத்தினால் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து அவர் இறக்கப்பட்டார். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். இன்றைய கூட்டத்திலும் அந்த விடயம் பேசப்பட்டு இறுதியில் சுமூகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அதற்கு இணங்கி இந்த தீர்மானத்தை நிறை வேற்றியிருக்கிறோம். அந்தவகையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கட்சியில் பதவி நிலையில் உள்ள மூவர் அதாவது தலைவர், நிர்வாக செயலாளர், பொருளாளர் ஆகியோர் இந்த விடயங்கள் உண்மையாக நடந்தனவா இல்லையா என்பது தொடர்பாக சிறிதரனுடனும் கலந்துபேசி ஆராய்ந்து, மத்திய செயற்குழுவிற்கு அறிவிப்பார்கள். ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. ஆனால் ஒரு இணக்கப்பாடாக இப்படி ஒரு பொறிமுறை ஏற்ப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net