பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது நாட்டில் போதுமான சீனி கையிருப்பு இருப்பதால் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் குறித்த சங்கம் கூறியுள்ளது.
இதேவேளை, டொலர் மதிப்பு உயர்வால் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இந்தியாவின் ஏற்றுமதி தடையுடன் தொடர்புடையதல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.