← முகப்பு தமிழ்

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச ச

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 84 பார்வைகள்

சிலாபம் மேல் நீதிமன்றத்தினால் இன்று (15) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, தாக்குதலுக்குள்ளான பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த 10 இலட்சம் ரூபாயைச் செலுத்தத் தவறினால், மேலும் 24 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் சிலாபம் மேல் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இருப்பினும், சனத் நிஷாந்த 2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தமையால், இன்று நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜகத் சமந்த மாத்திரமே முன்னிலையாகியிருந்தார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாட்சியங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net