← முகப்பு செய்திகள்

அமெரிக்க, ஈரான் இடையே போர் முடிந்துவிட்டதாகவும், வரும் 19-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
அமெரிக்க, ஈரான் இடையே போர் முடிந்துவிட்டதாகவும், வரும் 19-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்
போர் முடிந்தது ஈரான் அறிவிப்பு

கடந்த பிப்ரவரி 28ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், மேற்காசிய நாடான ஈரான் மீது கூட்டாக தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரானும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியதுடன், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.

இதனால், பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாட்டால் பெரும்பாலான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.நம் அண்டை நாடான பாகிஸ்தான், மேற்காசிய நாடுகளான கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கியுடன் இணைந்து, போரை நிறுத்த மத்தியஸ்த முயற்சியில் இறங்கியது. இதையடுத்து, ஏப்., 8 முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது.

ஒருபுறம் அமைதி பேச்சு நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்றுடன் போர் முடிந்துவிட்டது. அமெரிக்காவின் முற்றுகை, ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்டவை அடங்கிய அமைதி ஒப்பந்தம் ஜூன் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.

போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டதாகவும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தம் தங்களை கட்டுப்படுத்தாது என இஸ்ரேல் அறிவித்து உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net