← முகப்பு இன்றைய ராசிபலன்

Sun Moon Make Vyatipat Yoga On 27 May 2026: சந்திரனும் சூரியனும் 180

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 20 பார்வைகள்
Sun Moon Make Vyatipat Yoga On 27 May 2026: சந்திரனும் சூரியனும் 180

Sun Moon Make Vyatipat Yoga On 27 May 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் நிலைகள் மற்றும் மற்ற கிரகங்களுடனான சேர்க்கைகளால் சுப அல்ல அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

மறுபுறம், நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். குறுகிய காலத்தில் சந்திரன் நிலையை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் சேர்ந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் சந்திரனும் சூரியனும் 180 டிகிரி கோணத்தில் நேர் எதிரே இருந்து, மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் வியதீபாத யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

யோகங்களில் இந்த யோகம் அமங்கலமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோக காலத்தில் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட யோகமானது மே 27 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். இருப்பினும் 4 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Sun Moon Make Vyatipat Yoga On 27 May 2026 These Zodiac Signs Should Be Careful

ரிஷபம்

வியதீபாத யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய முதலீடுகள், பெரிய நிதி முடிவுகள் அல்லது கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்கக்கூடும். எப்போதும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் பொறுமை, நிதானம் ஆகியவற்றை கடைப்பிடிப்பது நல்லது.

Sun Moon Make Vyatipat Yoga On 27 May 2026 These Zodiac Signs Should Be Careful

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் வியதீபாத யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். உடன் வேலை செய்வோருடன் தவறான புரிதலோ அல்லது வாக்குவாதங்களோ ஏற்படலாம். இக்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பதே நல்லது. அவசரப்பட்டு செயல்படுவதைத் தவிர்த்து, பொறுமையாக சூழ்நிலைகளை கையாள முயற்சிக்க வேண்டும்.

Sun Moon Make Vyatipat Yoga On 27 May 2026 These Zodiac Signs Should Be Careful

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் வியதீபாத யோகத்தால் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளை செய்வதையோ அல்லது ரிஸ்க் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் எதை செய்தாலும், இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இக்காலத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் நன்கு சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே நன்மை தரும்.

Sun Moon Make Vyatipat Yoga On 27 May 2026 These Zodiac Signs Should Be Careful

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் வியதீபாத யோகத்தால் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனம் ஒருவித அழுத்தத்துடன் இருக்கும். மறைமுக எதிரிகளால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net