← முகப்பு தமிழ்

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறலுடன் அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடி

🕐 08 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறலுடன் அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஜனநாயகக் கல்வி முறையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முன்நிற்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் மனிதவள முகாமைத்துவ மொடியுலின் முதலாம் கட்டம் மற்றும் ‘ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் முன்னோடித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற வகையில், அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஜனநாயகக் கல்வி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும்.

அதற்காகச் சரியான தரவுகள், கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரை டிஜிட்டல் மயமாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாமும் மாறி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

அத்துடன், அரச சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என நாம் நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று (08) வேரஹெர
08 Jun 2026
📰
தமிழ்
புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பழியிட போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற
08 Jun 2026
📰
தமிழ்
டெங்கு ஒழிப்பிற்காக 3 நாட்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பி
25 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
இஸ்ரேலின் வடக்கு பகுதியை இலக்கு வைத்து ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மற்றும்
43 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதிப் பற்றிய குழு இன்று (08)
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net