← முகப்பு செய்திகள்

100ஆண்டுகளுக்கு -உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட '14.03.1892 மறுக்கப்பட்ட நீதி'

🕐 18 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
100ஆண்டுகளுக்கு -உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட '14.03.1892 மறுக்கப்பட்ட நீதி'
director tamil silambarasan interview

இது என்ன மாதிரியான கதைக் களம்? எந்தப் பகுதியில் நடந்தது?

"தஞ்சை நிலப்பரப்பில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை முன்னிலைப்படுத்திய திரைப்படம் இது நூறு ஆண்டுகளுக்கு முன் களிமண்ணால் ஆன ஓர் அம்மன் சிலையை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். வெயிலிலும் மழையிலும் சிலை வீணாவதை உணர்ந்த ஒரு சமூகம் அதைக் கற்சிலையாக மாற்றுவோம் என முன்னெடுக்கின்றனர். அதை ம.மோகன் விரும்பாத இன்னொரு சமூகம் அவர்கள் மீது தாக்குதல் நடத்த அது பெரிய போராட்டமாகிறது. அதில் பல உயிர்கள் கொலையாகின்றன. தஞ்சைப் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கடம்பங்குடி என்கிற ஊரின் கரைக்கும், அதன் எதிர்ப்புறம் உள்ள தென்கச்சி என்கிற ஊரின் கரைக்கும் இடைப்பட்ட பகுதிதான் கதைக்களம். ஓர் இரவுக்குள் நடக்கிற கதை நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பதால், கறுப்பு வெள்ளையிலேயே எடுத்துள்ளோம். கதை முழுக்கத் தீப்பந்த ஒளியில் நடக்கும்"

கொலைச் சம்பவம் நடக்கும் அளவுக்குப் பிரச்னை பெரிதாக, சாதிதான் காரணமாக இருந்ததா?

"அதிகார எண்ணத்தில் ஊறிய ஒரு சமூகத்தின் ஆத்திரத்தால் நான்கு பேர் கொடூரமாகக் கொல் லப்படுகிறார்கள். அப்போது நடந்தது போலவே, சமீபத்தில் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் படத்தில் வைத்துள்ளோம்."

படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லையாமே?

இது காட்டுக்குள் நடக்கும் கதை மாலை 6 மணிக்குப் படப்பிடிப்பைத் தொடங்கி
நள்ளிரவு 2 மணிக்கு முடிப்போம். தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்கவே பெண் கதாபாத்திரங்கள் வேண்டாம் என முடிவெடுத்தோம். இதில் நடித்துள்ள பதினைந்து பேரும் புதுமுகங்கள்.”

ஒன்றரை மணி நேரத் திரைப்படம்தானா?

ஆமாம்! ஒன்றரை மணி நேரத்துக்குள் அந்த உண்மைச் சம்பவத்தின் பிரதான வலியைச் சொன்னால் போதும் என முடிவெடுத்துதான் இக்கதையைத் தயார் செய்தோம். எல்லா விழாக் களிலும் இது ஃபீச்சர் ஃபிலிம்' பிரிவில்தான் விருதுகளைக் குளித்து வருகிறது. பீகார், லக்னோ விருது விழாக்களில் எழுந்து நின்று கைதட்டியதைப் பெரும் அங்கீகாரமாகப் பார்க்கிறேன். அனுராக் காஷ்யப் எடுத்த தேவ்டி, கேங்க்ஸ் ஆஃப் வாஸ்யெப்பூர் ஆகிய படங்களைப் பார்த்து வியந்தி ருக்கிறேன். இன்று என்னுடைய 14.03.1892 மறுக்கப்பட்ட நீதி திரைப்படமும் அவரது 'பண்டார் திரைப்படத்தோடு சக படைப்பாகப் –
போட்டியில் இருப்பதைப் பெருமிதமாக உணர்கிறேன்.”

உங்களது பின்னணி?

நியூ டெல்லி மற்றும் லண்டனில் இயற்கை மருத்துவம் படித்தேன் 2009-ல் நடந்த ஈழப்படுகொலை என்னை ரொம்பவே பாதித்தது. மீடியா சார்ந்து பயணிப்போம் என சென்னைக்கு வந்தேன். வள்ளலார் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்தேன். பலராலும் பாராட்டப்பட்டது. போதை மது மாதிரி டிஜிட்டல் அடிக்ஷன் பற்றி எஸ்டிஆர் என்று ஒரு திரைப்படம் எடுத்தோம். அது 19 விருதுகள் பெற்றது. அதுவும் விரைவில் திரைக்கு வரும். இப்போது இந்த '14.03.1892' திரைப்படமும் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது"

இது எப்போது திரைக்கு வருகிறது?

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இத்தாலியில் நடக்கும் விழா அறிவிப்பு இருக்கும். அடுத்த ஒன்றரை மாதத்தில் திரையரங்க வெளியீடு பற்றி முடிவெடுப்போம்."

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net