← முகப்பு செய்திகள்

Mumbai Indians might release 5 players next season after disaster IPL 2026

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
Mumbai Indians might release 5 players next season after disaster IPL 2026

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் ஐந்து முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி, படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்தது. 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

மார்ச் 29 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஆதிக்கத்துடன் சீசனைத் தொடங்கியது. ஆனால், அதன்பிறகு அடுத்தடுத்து ஐந்து தோல்விகளில் சிக்கியது. அதிலிருந்து மீள முடியாமல் நட்சத்திரப் பட்டாளம் சீசன் முழுவதும் வெறும் 8 புள்ளிகளுடன் முடித்தது.

இந்த ஏமாற்றமளிக்கும் ஒன்பதாம் இடத்திற்குப் பிறகு, 2027 தொடருக்கான அணி கட்டமைப்பில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிர மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஏலத்திற்கு முன்னதாக, பல முன்னணி வீரர்களை விடுவிக்க அவர்கள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

IPL 2026: ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷி சரியில்லை.. மும்பை தோல்விக்கு குறித்து கோட்ச் பொலார்ட் தடாலடி

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் (ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ₹12.50 கோடிக்கு வாங்கப்பட்டு, 2026 சீசனில் 5 போட்டிகளில் 2 விக்கெட்), நியூசிலாந்து டி20 கேப்டன் மிட்செல் சான்ட்னர் (5 போட்டி, 5 விக்கெட், காயம், மாற்று சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளதால்), மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (7ல் 6 இன்னிங்ஸில் தோல்வி) ஆகியோர் விடுவிக்கப்படலாம்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் (2 ஆண்டுகள் அணியில் இருந்தும் ₹9.25 கோடிக்கு நியாயம் இல்லை, மாற்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்), சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்க்கண்டே (முதல் சில போட்டிகளில் தோல்வி, 3 ஆட்டங்களுக்குப் பிறகு நீக்கம்) ஆகியோரும் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு (பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி) 2026 சீசன் மறக்க முடியாதது. சூர்யகுமார் யாதவ் 13 போட்டிகளில் 270 ரன்கள் மட்டுமே எடுத்து விமர்சிக்கப்பட்டார். இருவரும் மோசமான ஆட்டத்திற்குப் பிறகும், அவர்கள் விலக விரும்பாத பட்சத்தில் அணியில் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026 பிளே ஆஃப் சுற்று அட்டவணை விவரம்.. யார் எந்த அணியுடன் மோதுகிறார்கள்? எலிமினேட்டர் எப்போது?

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, 2026 சீசனில் 13 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி ஏமாற்றினார். இந்த மோசமான ஆட்டத்திற்குப் பிறகும், அடுத்த ஐபிஎல் சீசனிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்வார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net