← முகப்பு இன்றைய ராசிபலன்

Mars Transit In Aries On 11 May 2026: செவ்வாய் மே 11 ஆம்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 36 பார்வைகள்
Mars Transit In Aries On 11 May 2026: செவ்வாய் மே 11 ஆம்

Mars Transit In Aries On 11 May 2026: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இந்நிலையில் செவ்வாய் மே 11 ஆம் தேதி மீன ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

இந்த மேஷ ராசியில் செவ்வாய் அடுத்த 45 நாட்கள் வரை இருப்பார். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வது மிகவும் செல்வாக்குமிக்கதாக இருக்கும். அதுவும் இயல்பை விட அதிக சக்தியுடன் செவ்வாய் இருப்பார். இதன் விளைவாக, தைரியம், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலின் காரணியான செவ்வாயின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்.

செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது இந்த செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வை உணரக்கூடும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில், வணிகம் மற்றும் நிதி ரீதியாக நல்ல ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு விளைவுகளானது மிதமானதாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை வலுவடையும். இருப்பினும் கோபத்தையும், அகங்காரத்தையும் தவிர்க்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Mars Transit In Aries On 11 May 2026 Effects On 12 Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். பல வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள்.

Mars Transit In Aries On 11 May 2026 Effects On 12 Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல சிரமங்களை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் தேவையற்ற கவலைகளைத் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனமாக முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் கவலையான பலன்கள் கிடைக்கும். அதாவது வாழ்வில் சில மாற்றங்களைக் காணலாம். திருமணமானவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதே வேளையில் வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான சில புதிய வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிரிகளை வென்று வீழ்த்துவார்கள். நண்பர்களுடன் சுற்றுலா மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையானது வழக்கத்தை விட வலுவாக இருக்கும்.

Mars Transit In Aries On 11 May 2026 Effects On 12 Zodiac Signs

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மகிழ்ச்சியைத் தரக்கூடும். இருப்பினும் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த முடிவுகளானது தீங்கை விளைவிக்கும்.

மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வீடு, வாகனங்கள் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் செயல்பாடுகளை அதிகரிக்கக்கூடும். குடும்பத்திற்குள் சில முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படலாம். வேலைக்கும் நட்புக்கும் இடையே சமநிலையைப் பேணுவது மிகவும் அவசியமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளன. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிதாக ஏதாவது செய்ய நினைத்தால், இக்காலம் அதற்கு உகந்ததாக இருக்கும். இருப்பினும் தவறான புரிதல்களால் தம்பதிகளிடையே மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Mars Transit In Aries On 11 May 2026 Effects On 12 Zodiac Signs

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் முன்னேற்றங்களைக் காண்பார்கள். இருப்பினும், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம், இல்லையெனில், உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம். கலைத் துறையில் இருப்பவர்கள் தனித்துவமான ஒன்றை முயற்சிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net