Mars Moon Conjunction Make Chandra Mangal Yog 2026: நவகிரகங்களில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மேஷ ராசிக்குள் ஜூன் 11 ஆம் தேதி காலை 8:16 மணிக்கு நுழைந்தார் மற்றும் இந்த மேஷ ராசியில் சந்திரன் ஜூன் 13 ஆம் தேதி வரை இருப்பார். ஏற்கனவே மேஷ ராசியில் செவ்வாய் இருப்பதால், சந்திரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது.
ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமான மற்றும் செல்வத்தை அதிகரிக்கும் யோகமாகக் கருதப்படுகிறது. அதுவும் இந்த யோகம் குறிப்பாக நிதி நிலையை வலுப்படுத்துவதோடு, தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைக் கொடுக்கும்.
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது மேஷ ராசியில் உருவாகியுள்ள சந்திர மங்கள யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி நிலைமை மேம்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். முக்கியமாக இக்காலத்தில் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். வங்கி இருப்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் முடிக்கப்படாத வேலைகள் சிறப்பாக முடிவடையும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். நீண்ட பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். திடீரென்று பண வரவு அதிகரிக்கும். ஊடகம் அல்லது படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.