Jupiter Mars Make Labh Drishti Yog On 28 June 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களும், அவற்றினால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்தின் இறுதியில் ஒரு அற்புதமான மற்றும் மங்களகரமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் லாப திருஷ்டி யோகம். இந்த யோகமானது ஜூன் 28 ஆம் தேதி குரு மற்றும் செவ்வாயால் உருவாகவுள்ளது.
ஜோதிடத்தின் படி, லாப திருஷ்ட யோகமானது இரண்டு கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வீட்டில் அல்லது பார்வையில் அமையும் போது உருவாகிறது. இந்த யோகம் தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், பண பிரச்சனைகளை தணிக்கவும், தொழிலில் எதிர்பாராத லாபத்தையும் வெற்றியையும் தரும்.
அதுவும் இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
லாப திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவு உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் புதிய முதலீடுகளை செய்வதற்கும் இக்காலம் உகந்ததாக இருக்கும்.

சிம்மம்
லாப திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், ஜூன் 28-க்கு பின் தொடங்கினால் நல்ல லாபத்தைப் பெறலாம். பரம்பரை சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு
லாப திருஷ்டி யோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலைக்காக நீண்ட காலம் முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மகரம்
லாப திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், குருவின் அருளால் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புக்ள தேடி வரும். நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.