← முகப்பு செய்திகள்

BAN vs AUS 2nd ODI: Bangladesh Wins First-Ever ODI Series Against Australia

🕐 11 Jun 2026 📂 செய்திகள் 10 பார்வைகள்
BAN vs AUS 2nd ODI: Bangladesh Wins First-Ever ODI Series Against Australia

டாக்கா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, வரலாற்றிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் அவர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மேட் ஷார்ட், கூப்பர் கான்னோலி, மேட் ரென்ஷா ஆகிய 3 பேட்ஸ்மேன்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி '0' ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இதுவே முதல்முறையாகும்.

BAN vs AUS 2nd ODI Bangladesh Wins First-Ever ODI Series Against Australia with a 5-Wicket Win

பின்னர் வந்த கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் 34 ரன்களும், கேமரூன் கிரீன் 25 ரன்களும் எடுத்தனர். ஒருகட்டத்தில் 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த ஆஸ்திரேலிய அணியை மார்னஸ் லபுசேன் (55*) மற்றும் சேவியர் பார்ட்லெட் (52) ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டது. ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மழை குறுக்கீடு காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 41 ஓவர்களில் 192 ரன்கள் இலக்காக மாற்றியமைக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் 42 ரன்களும், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 41 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இறுதியில் தவ்ஹீத் ஹிரிடோய் (40*) மற்றும் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (22*) ஜோடி பொறுப்புடன் விளையாடி 35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை முன்கூட்டியே கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் பெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி இதுவாகும்.

IND A vs AFG A: 349 ரன் அடித்தும் இந்தியா ‘ஏ’ தோல்வி.. டக்வொர்த் விதியால் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ வெற்றி

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 4 ஒருநாள் தொடர்களை வென்று வங்கதேசம் அசுர ஃபார்மில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் 20ம் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட
11 Jun 2026
செய்திகள்
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
11 Jun 2026
செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறு
11 Jun 2026
செய்திகள்
ODI World Cup 2027: ICC Releases Tentative Dates and Format for 2027
11 Jun 2026
செய்திகள்
IND A vs AFG A: Afghanistan 'A' pulled off a shocking 4-run
11 Jun 2026
செய்திகள்
நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ், திருக்குறள் தேசிய இலக்கியம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல் 
11 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net