← முகப்பு செய்திகள்

KKR vs MI- Suryakumar Yadav Struggles Continue Amid Rain Interruption In IPL

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
KKR vs MI- Suryakumar Yadav Struggles Continue Amid Rain Interruption In IPL

கொல்கத்தா: ஐபிஎல் 2026 தொடரில் இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்துள்ளார். கொல்கத்தா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சௌரப் துபே வீசிய பந்தை தவறான ஷாட் ஆட முயன்று அவர் போல்டானார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ், நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ந்து மோசமான ஃபார்மில் தவித்து வருகிறார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பைமழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கேகேஆர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.தொடக்க ஆட்டக்காரர் ரையான் ரிக்கெல்டன் 6 ரன்களிலும், நமன் தீர் ரன் ஏதும் எடுக்காமலும் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

MS Dhoni: சிஎஸ்கே அணியுடன் கருத்து வேறுபாடு.. தோனி அணியை விட்டு விலக முடிவு என தகவல்

சௌரப் துபேயின் அசுர வேகம்:

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியை மீட்க போராடியது. ஆனால், கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் சௌரப் துபே இந்த கூட்டணியை உடைத்தார். 15 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவை முதலில் வீழ்த்திய துபே, அடுத்து வந்த இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவையும் க்ளீன் போல்டாக்கினார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த போது, துபேயின் பந்தை புல் (Pull) செய்ய முயன்று துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்தார்.அவருடைய இன்னிங்சில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும்.

மும்பையின் பரிதாப நிலை:

சூர்யகுமார் யாதவின் விக்கெட்டைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் சரிவைச் சந்தித்தது. அதன்பின், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து அணியை நிமிர்த்த முயன்றபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

IPL 2026: பிளே ஆப் பந்தயத்தில் 5 அணிகள், இருப்பதோ ஒரு இடம்.. சிஎஸ்கே தகுதி பெற என்ன செய்யனும்?

தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம், மும்பை ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ரோஹித் மற்றும் சூர்யகுமார் ஆகிய இரு பெரும் தூண்களை சாய்த்த சௌரப் துபேயை கொல்கத்தா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு சீசனில் சூர்யகுமார், 12 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 210 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 17 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 148 என்ற அளவிலும் உள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net