← முகப்பு இன்றைய ராசிபலன்

Mercury transit in Punarpoosa nakshatra bring prosperity to these 3 zodiac signs:

🕐 1 நாள்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 19 பார்வைகள்
Mercury transit in Punarpoosa nakshatra bring prosperity to these 3 zodiac signs:

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் இளவரசரான புதன் ஜூன் மாதத்தில் தனது நட்சத்திரத்தை மாற்றப்போகிறார்.

ஜோதிடத்தில் புதன் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் வணிகம் ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதன் ஜூன் 11 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசித்து, ஆகஸ்ட் 8 வரை அங்கேயே நிலைத்திருக்கும். இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் கூடுதல் நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருப்பதால் அவர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேரடியான மாற்றங்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் தரப்போகிறது. இந்த பெயர்ச்சியால் அவர்களின் நற்பெயரும் சமூக அந்தஸ்தும் மேம்படும். குடும்பத்தில் நிலவிவந்த கடந்த கால மோதல்கள் இப்போது தீர்க்கப்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் வெற்றியைப் பெற முடியும். அவர்களின் திருமண மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும்.

சொத்து அல்லது நிலம் தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்களை அனுபவிக்கலாம், மேலும் தொழில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலவி வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம்.

Mercury Transit in Punarpoosa Nakshatra Bring Prosperity To These 3 Zodiac Signs

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் புதனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் அபரிமிதமான நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்களின் கடந்தகால முதலீடுகள் இப்போது லாபத்தைத் தரும். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கும். வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் மற்றும் பல்வேறு திட்டங்களிலிருந்து பெரும் லாபத்தைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான வேலையைப் பெறலாம் மற்றும் பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறலாம். மேலும், வணிகர்கள் புதிய வியாபாத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். தொழில் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் கடின உழைப்பிற்கான முழுபலனைப் பெறலாம். அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் இரட்டிப்பு நன்மைகளை அடையப்போகிறார்கள். இது அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும் காலமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள், அதன் மூலம் வெற்றியை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். வியாபாரிகளுக்கு சில பெரிய ஒப்பந்தங்கள் அவர்களைத் தேடி வரும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். இது பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net