← முகப்பு இன்றைய ராசிபலன்

Mercury Nakshatra Transit On 11 June 2026: புதன் தற்போது தனது சொந்த ராசியான

🕐 09 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Mercury Nakshatra Transit On 11 June 2026: புதன் தற்போது தனது சொந்த ராசியான

Mercury Nakshatra Transit On 11 June 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், அடிக்கடி ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அப்படிப்பட்ட புதன் தற்போது தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 11 ஆம் தேதி புதன் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் புதன் ஜூலை 08 ஆம் தேதி வரை இருப்பார். இந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். புதன் குரு பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வது மிகவும் மங்களகரமானது.

இந்த புதனின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் மற்றும் லாபத்தைப் பெறுவார்கள். அதோடு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். முக்கியமாக புதனின் அருளால் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Mercury Nakshatra Transit On 11 June 2026 List Of Lucky Zodiac Signs

மிதுனம்

புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும். இதனால் எந்த ஒரு விஷயத்திலும் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். தொழிலில் உங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

மேலும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கலாம். உடன் வேலை செய்வோருடனான ஒருங்கிணைப்பு மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலைகளில் இதுவரை தடையை சந்தித்து வந்தால், புதனின் அருளால் வெற்றிகரமாக நிறைவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும்.

Mercury Nakshatra Transit On 11 June 2026 List Of Lucky Zodiac Signs

சிம்மம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றிகள் குவியும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். முடிவெடுக்கும் திறன் வலுவடையும். தொழிலதிபர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஐடி துறையில் இருப்பவர்களுகு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

Mercury Nakshatra Transit On 11 June 2026 List Of Lucky Zodiac Signs

துலாம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பேச்சில் இனிமை அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் உங்கள் நிலைமை உயரும். அரசியலில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழிலில் புதிய சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் ஒரு புதிய தொழிலை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net