← முகப்பு இன்றைய ராசிபலன்

June 2026 Monthly Horoscope: Zodiac signs who will Get tough times in

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 25 பார்வைகள்
June 2026 Monthly Horoscope: Zodiac signs who will Get tough times in

June 2026 Monthly Horoscope: 2026 தொடங்கி பாதி வருடம் கண்ணை மூடி திறப்பதற்குள் முடியப் போகிறது. ஜூன் மாதம் தொடங்கும்போது ​​ஏற்படும் பல கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை. சில ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆபத்துகள் நிறைந்த மாதமாக இருக்கும்.

ஜூன் மாதத்தில் நடக்கும் சில கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்கப் போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் துரதிர்ஷ்டமான விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் அவர்கள் எதிர்பாராத சிக்கல்களை உருவாக்கப்போகிறது. இந்த மாதத்தில் தொழிலில் லாபமும், முன்னேற்றமும் எதிர்பார்த்தபடி இருக்காது. பெரிய நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் அதிக பணம் முதலீடு செய்வது நஷ்டத்திற்கு வழிவகுக்கும். புதிய வேலையைப் பெற நீங்கள் இன்னும் கொஞ்சம் கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருக்கும்.

அவர்கள் தற்போதைய வேலையிலும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் மற்றவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி முன்னேற்றத்தை அடைய நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கும். பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் மூத்த உறுப்பினர்களின் வார்த்தைகளைக் கேட்பது நல்லது. வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென்றால், எல்லாவற்றையும் பொறுமையுடன் செய்வது நல்லது. இந்த மாதத்தில் கோபத்தைக் குறைப்பது நல்லது, அதிகப்படியான கோபத்துடன் செய்யப்படும் எதுவும் தீங்கு விளைவிக்கும்.

June 2026 Horoscope Zodiac Signs Who Will Get Tough Times in June 2026

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நினைத்த எதுவும் கைகூடாது, இதனால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். இந்த மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளின் விளைவாக அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதிநிலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அல்லது வாய்ப்புகளையும் பெறலாம். அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நேர்மறையான உறவுகளைப் பேணுவது உங்களுக்கு கடினமாக மாறலாம்.

அவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் வீணாகலாம். வணிகத்தைப் பொறுத்தவரை, அவர்களின் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாமல் போகலாம். நிதிரீதியாக தேவையற்ற செலவுகளால் அவர்கள் பணத்தை இழக்க நேரிடும்.மேலும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் அவர்கள் இழக்க நேரிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் பல தடைகளையும், சவால்களையும் சந்திக்கப் போகிறார்கள். ஜூன் மாதத்தில் மீன ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் இருக்காது, தற்போதைய வேலையை மாற்றும் முடிவை கைவிடுங்கள். ஒரு சிறந்த வேலைக்கு உங்களை தயார்படுத்திக் கொள்வதும், புதிய வேலைக்கு விண்ணப்பிக்க சரியான நேரத்திற்காக காத்திருப்பதும் நல்லது. இந்த காலகட்டத்தில் முதலீடுகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பெரிய அளவிலான இழப்புகளை ஏற்படுத்தும்.

உங்கள் திருமணம் அல்லது காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் நடத்தையில் கூடுதல் கவனம் அவசியம். உங்களின் வெளிப்படைத்தன்மை உங்கள் உறவுகளில் நம்பிக்கையைக் காப்பாற்ற உதவும். உங்கள் வணிக ஒப்பந்தங்கள் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும், எனவே எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். இந்த மாதத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net