← முகப்பு செய்திகள்

IPL 2026- RCB Tim David Penalised For Gesture During IPL Match –

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
IPL 2026- RCB Tim David Penalised For Gesture During IPL Match –

ராய்ப்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நாகரிகமற்ற சைகை செய்ததற்காக பிசிசிஐயால் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு தனது போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக 2 டிமேரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மே 11 அன்று நடந்த பரபரப்பான போட்டியில், கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பிறகு, டிம் டேவிட் நடுவிரலைக் காட்டியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான அவரின் இச்செயல், போட்டி விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையின்படி, டிம் டேவிட் ஐபிஎல் நடத்தை விதிகளின், பிரிவு 2.6ஐ (ஆட்சேபனைக்குரிய சைகை செய்தல்) மீறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் டிம் டேவிட், ஐபிஎல் வீரர் மற்றும் அணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின் நிலை 1ஐ மீறியதற்காக, தனது போட்டி ஊதியத்தில் 30% அபராதம் மற்றும் இரண்டு புள்ளிகளும் பெற்றுள்ளார்" என அறிக்கை குறிப்பிட்டது.

IPL 2026: மும்பை அணியை பார்க்கவே வேதனையாக இருக்கு.. தோல்விக்கு காரணம் இது தான்- ஹர்பஜன்

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டிம் டேவிட் ஏற்றுக்கொண்டதாக ஐபிஎல் நிர்வாகம் மேலும் தெளிவுபடுத்தியது. "டிம், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, போட்டி நடுவர் அமித் ஷர்மா விதித்த தடைக்கு சம்மதித்தார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விதிமீறலுக்கான தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துகிறது.

இந்தச் சம்பவம் நடந்த ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலையில், 167 ரன்கள் இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டன. ரோமரியோ ஷெப்பர்ட் முக்கியமான தருணத்தில் அவுட்டானதால், மும்பை இந்தியன்ஸ் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் ஆட்டம் இருந்தது.

IPL 2026: ஒரே கையால் சிக்சர்.. அரைசதம் அடித்து கோலி, டிராவிட் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்

ஆனால், புவனேஷ்வர் குமார் அடித்த ஒரு சிக்ஸர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. பின்னர், ரசிக் சலாம் டார் கடைசி பந்தில் வெற்றியை உறுதிப்படுத்தி, RCB அணியினருக்கு த்ரில் வெற்றியைப் பரிசளித்தார். RCB டகவுட் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்க, டிம் டேவிட் காட்டிய சர்ச்சைக்குரிய சைகை ஒளிபரப்பு காட்சிகளில் பதிவானது. இது விரக்தி, அதீத உற்சாகம் அல்லது கடுமையான போட்டியின் வெளிப்பாடா என்பது குறித்து இணையத்தில் விவாதம் கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும
2
R. Praggnanandhaa created history by becoming the first Indian ch
3
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 06 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
4
நார்வே செஸ்: கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் –
செய்திகள் · 23 நிமிடங்கள் முன்னர்
5
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இ
பதிவு · 1 மணி நேரம் முன்னர்
6
கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்ற
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலை
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net