← முகப்பு செய்திகள்

IPL 2026: Rain Delays Toss in Crucial RCB vs KKR Clash in

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
IPL 2026: Rain Delays Toss in Crucial RCB vs KKR Clash in

ராய்ப்பூர்: 2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் திடீரென மழை குறுக்கிட்டுள்ளதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்டம் திட்டமிட்டபடி முழுமையாக நடக்குமா என்ற பதைபதைப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இரவு 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட இருந்த நிலையில், ராய்ப்பூர் மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் டாஸ் நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

IPL 2026 Rain Delays Toss in Crucial RCB vs KKR Clash in Raipur Playing XI and match updates

வானத்தில் மின்னலுடன் லேசான தூறல் காணப்பட்ட நிலையில், டாஸ் போடும் நேரத்தில் மழை முழுமையாக நின்றது. உடனடியாக மைதான பராமரிப்பு பணியாளர்கள் களமிறங்கி தார்பாய்களை அகற்றி ஈரப்பதத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கள நடுவர்களான ரோகன் பண்டிட் மற்றும் நிதின் மேனன் ஆகியோர் மைதானத்தின் தற்போதைய நிலைமையை நேரில் ஆய்வு செய்தனர்.

IPL 2026: “12 லட்சம் அபராதம் கட்டுங்க”.. சிக்கிய கம்மின்ஸ்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு அடுத்த அடி

ஆடுகளம் விளையாட உகந்ததாக மாறியவுடன் விரைவாக டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net