← முகப்பு செய்திகள்

IPL 2026- Kolkata Knight Riders Defeat Mumbai Indians In IPL 2026 Match

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 31 பார்வைகள்
IPL 2026- Kolkata Knight Riders Defeat Mumbai Indians In IPL 2026 Match

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இன் 65-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, கேகேஆர் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்தனர். கேகேஆர் தரப்பில் சௌரப் துபே மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுனில் நரைன் 4 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி தங்களது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த முக்கியமான வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் தங்களது பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தற்போதைக்கு உயிர்ப்புடன் வைத்துள்ளது. தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9-வது இடத்திலேயே நீடிக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி மற்றும் ஒரு முடிவில்லா போட்டியுடன் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கேகேஆர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் சில சாதகமான முடிவுகள் தேவைப்படுகின்றன. டெல்லிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுடன், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களது கடைசி போட்டிகளில் தோற்க வேண்டும் என்று கொல்கத்தா ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net