← முகப்பு செய்திகள்

ICC ODI Ranking: India successfully retained its number one position in the

🕐 11 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
ICC ODI Ranking: India successfully retained its number one position in the

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி தனது முதலிடத்தை வெற்றிகரமாக தக்கவைத்துள்ளது. அதே சமயம், 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடனான புள்ளி வித்தியாசம் சற்று குறைந்துள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள ஆண்டு தரவரிசை பட்டியலின்படி, இந்திய அணி 119 புள்ளிகளில் இருந்து 118 புள்ளிகளாக சரிந்துள்ளது. அதே நேரத்தில், 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 113 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 8ல் இருந்து 5 ஆக குறைந்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.

ICC ODI Ranking India Retains Top Spot in ICC ODI Team Rankings as New Zealand Closes the Points Gap

இந்த புதிய தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது. அதன்படி பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி தென்னாப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி 98 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசம் 9வது இடத்தில் நீடிக்கிறது. மற்ற பிரிவுகளில் அயர்லாந்து 11வது இடத்திற்கும், அமெரிக்கா 13வது இடத்திற்கும், ஐக்கிய அரபு அமீரகம் 19வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி, டி20 தரவரிசையிலும் இந்தியாவே முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

தற்போது 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, ஜூன் 14 முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. விராட் கோலி ஏற்கனவே விலகிய நிலையில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரை விட 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் இவ்வளவு மவுசு? ரகசியத்தை உடைத்த ஜாஸ் பட்லர்

ஐபிஎல் 2026 தொடரின் போது ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக பாண்டியா குணமடைய 3 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் ஜூன் 14ல் தர்மசாலாவிலும், ஜூன் 17ல் லக்னோவிலும், ஜூன் 20ல் சென்னையிலும் நடைபெறவுள்ளன. மூத்த வீரர்கள் இல்லாததால், இளம் வீரர்களுக்கு இது தங்களை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.

வீணான வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்.. ஆப்கன் ‘ஏ’ அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடியும் ஏமாற்றம்

மேலும் செய்திகள்
செய்திகள்
Rahul Dravid ‘s younger son, Anvay Dravid, has been selected as a
11 Jun 2026
செய்திகள்
விளையாட்டு உலகில் கிரிக்கெட் சீஸன் சற்று ஓய்ந்து கால்பந்தின் காலம் தொடங்கிவிட்டது. இதுவரை நடந்த உலகக்
11 Jun 2026
செய்திகள்
முதல்வர் விஜய்க்கு ஜூன் 22-ம் தேதி பிறந்தநாள் வருகிறது. அன்றையதினம் தவெகவினர் அட்ராசிட்டிகளில் ஈடுபடக்கூடாது எ
11 Jun 2026
செய்திகள்
பொதுவாக ரசாயனப் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகள் அனைத்தும் விஷத்தன்மை உள்ளவையாக இருந்தாலும், 'பாராகு
11 Jun 2026
செய்திகள்
அதிமுக, அமமுக இணைப்பு தொடர்பாக எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் எண்ணிடம் வலியுறுத்தவில்லை. ஆனால் வெயிட்
11 Jun 2026
செய்திகள்
FIFA World Cup 2026: Is FIFA Ruining Football for Ads? Outrage Over
11 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net