← முகப்பு செய்திகள்

CSK vs LSG- Urvil Patel scored Fastest IPL Fifty With 13-Ball Score

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 36 பார்வைகள்
CSK vs LSG- Urvil Patel scored Fastest IPL Fifty With 13-Ball Score

லக்னோ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த ஜெய்ஸ்வாலின் சாதனையை சமன் செய்து, உர்வில் படேல் தனது பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்தார். இதன் மூலம் 13 பந்துகளில் அவர் அரைசதம் செய்தார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

லக்னோ வீரர் ஜோஸ் இங்கிலீஷ் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால், சிஎஸ்கே வீரர்கள் பிரமாதமாக பந்துவீசி லக்னோவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். இதனால் 250 ரன்களுக்கு மேல் செல்ல இருந்த லக்னோ பேட்டிங் 203 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து சிஎஸ்கே அணியும் தங்களது சேஸிங்கை தொடங்கியது. சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சூழலில் 27 வயதான குஜராத்தை சேர்ந்த வலது கை பேட்டர் படேல், 3வது வீரராக களமிறங்கினார். அவர் லக்னோ பந்துவீச்சை சிதறடிக்க, சிஎஸ்கே அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

IPL 2026: ஓரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீர ஜெமி ஓவர்டன்.. தடுமாறிய லக்னோ அணி

உர்வில் பட்டேலை கட்டுப்படுத்த லக்னோ எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன், வெறும் 13 பந்துகளில் உர்வில் பட்அடல் 50 ரன்களை எட்டினார்.இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனையை அவர் சமன் செய்தார்.

IPL 2026: என்ன மாதிரி ரன் அவுட்.. பவுண்டரி லைனில் இருந்து சிஎஸ்கே வீரர் பிரவீஸ் செய்த சம்பவம்

ஜெய்ஸ்வால் 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஈடன் கார்டனில் 13 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உர்வில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். இதனால் சிஎஸ்கேக்கு தேவைப்படும் ரன்களும், எஞ்சியிருக்கும் பந்துகளுக்கான இடைவெளி குறைந்தது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net