← முகப்பு செய்திகள்

CSK: Chennai Super Kings pacer Anshul Kamboj surprised a Tamil Nadu police

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 31 பார்வைகள்
CSK: Chennai Super Kings pacer Anshul Kamboj surprised a Tamil Nadu police

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை ஒரு குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி தன் பக்கம் திருப்பினார். முதல்வர் விஜய்க்கு அருகே பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த அந்த அதிகாரி, அச்சு அசலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் போலவே காட்சியளித்ததால் பிரபலம் ஆனார். யார் அந்த போலீஸ் அதிகாரி என்ற தேடல் முடுக்கிவிடப்பட்ட நிலையில், அவரை சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ள சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

முதலமைச்சர் பதவியேற்பு விழா நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது, மேடையின் அருகே நின்றிருந்த அந்த போலீஸ் அதிகாரியின் முகம் சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் போல் இருந்தது. இதை கவனித்த நெட்டிசன்கள், நேராக மைதானத்தில் இருந்து அன்ஷுல் கம்போஜ் எப்படி போலீஸ் உடையில் முதல்வர் விழாவிற்கு சென்றார் என மீம்ஸ்களை பறக்கவிடத் தொடங்கினர்.

CSK Star Anshul Kamboj Meets Policeman Lookalike from CM Vijay s Swearing-in Ceremony

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது பாணியில் இதனை நகைச்சுவையாக கிண்டல் செய்திருந்தார். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமே இதில் தலையிட்டு, உண்மையான அன்ஷுல் கம்போஜ் லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என வேடிக்கையாக விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், அந்த போலீஸ் அதிகாரியை அன்ஷுல் கம்போஜ் சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்து கம்போஜ் கூறுகையில், எனது நண்பர்கள் பலரும் இந்த மீம்ஸ்களை இன்ஸ்டாகிராமில் அனுப்பி அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என தொடர்ச்சியாக கேட்டனர். நான் அங்கு இல்லை என அவர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். அந்த அதிகாரி பார்ப்பதற்கு கிட்டத்தட்ட என்னைப் போலவே இருக்கிறார். அவர் தனது தலையில் உள்ள தொப்பியை கழற்றினால் தான் எங்களது முக ஒற்றுமை முழுமையாகத் தெரியும் என சிரித்துக் கொண்டே கூறினார்.

பயிற்சி முகாமின் போது அந்த அதிகாரியை சந்தித்த கம்போஜ், அவருடன் நீண்ட நேரம் சிரித்து பேசி மகிழ்ந்தார். நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் பயணத்தில் அன்ஷுல் கம்போஜின் பங்கு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் சீரான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணிகளை திணறடித்து வருகிறார்.

IPL 2026: “12 லட்சம் அபராதம் கட்டுங்க”.. சிக்கிய கம்மின்ஸ்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு அடுத்த அடி

இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 19.21 என்ற சிறப்பான பந்துவீச்சு சராசரியுடன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கான ஊதா நிற தொப்பி பந்தயத்தில் அவர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net