2025.09.11 ஆம் திகதியிட்ட 30/2025 ஆம் இலக்கச் சுற்றறிக்கை மற்றும் பாடசாலைப் பரீட்சை திகதிகள் உள்ளடக்கப்பட்டு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2025.07.09 ஆம் திகதியிட்ட 6/1/2025 ஆம் இலக்க சுற்றறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்தப் பரீட்சைகளுக்குரிய பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்பித்து முடித்து, மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் காணப்படின், அதற்கென முன்கூட்டிய திட்டமிடலுடன் செயற்பட்டு, மேலதிக நேரத்தை ஒதுக்கியேனும் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நடடிவடிக்கைகளை எடுக்குமாறும், இது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்கான கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.