இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

ஏவுகணை

பட மூலாதாரம், Getty Images

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ஃபான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன.

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)