← முகப்பு தமிழ்

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை

🕐 4 நிமிடங்கள் முன்னர் 📂 தமிழ் 10 பார்வைகள்

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு (Writ Petition), இன்று (17) பிற்பகல் 1.30 மணிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்னிலையாகவுள்ளார்.

இன்று காலை இந்த விடயம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்த மனு தொடர்பான ஆவணங்கள் இன்று காலை 8.00 மணியளவில் தான் கிடைத்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அத்துடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளிடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரியவுடன் அமர்வில் இருந்த நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ, இந்த மனுவை விசாரணை செய்வதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
உயிர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி
17 Jun 2026
📰
தமிழ்
இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், சிறுவர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மு
17 Jun 2026
📰
தமிழ்
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச
17 Jun 2026
📰
தமிழ்
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்
17 Jun 2026
📰
தமிழ்
உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
(எம்.மனோசித்ரா)உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தனக்குத் தெரிந்த உண்மைகளை குற்றப் புலனாய்வு
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net