← முகப்பு செய்திகள்

19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007
19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா அஞ்சலி மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர்

19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007 வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘கற்றது தமிழ்’. இதில் நடிகர் ஜீவா, பிரபாகராகவும், அஞ்சலி, ஆனந்தியாகவும் வாழ்ந்திருப்பார்கள். நடிகை அஞ்சலி அறிமுகமான படமும் இதுவே. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘வெயில்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்து தேசிய விருது வென்ற வசந்தபாலன், இவர்கள் இணையும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெயில் படத்தை தொடர்ந்து அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக அர்ஜுன் தாஸ் துஷாரா விஜயனை வைத்து ‘அநீதி’ படத்தை இயக்கியிருந்தார் வசந்தபாலன் இந்நிலையில் ஜீவா, அஞ்சலியை வைத்து வசந்தபாலன் இயக்கும் படத்தை கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வசந்தபாலனின் அங்காடித் தெரு படத்தில் அஞ்சலி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net