17-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் அரலேக்கர் அவர்கள் கலந்துகொண்டார். அவர் அங்கே சிறப்புரையாற்றுவதற்கு முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட்டது. அதன் பின்னரே தேசிய கீதம் பாடப்பட்டது. இதற்கு ஆளுநர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர் விஜய் அரசாங்கத்தை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளதோடு, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கும் என்றும் கூறியுள்ளார்.
திமுகவைப் போல ஆளுநரிடம் முரண்டு பிடித்துப் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவிக்காமல், முதல்வர் விஜய் மிகவும் சாதுரியமாகக் காய் நகர்த்திச் செல்கிறார் என்றே பலராலும் பார்க்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, மத்திய அரசையும் விஜய் மிகக் கடுமையாக எதிர்க்கவில்லை. மும்மொழிக் கொள்கையைத் தாம் எதிர்ப்பதாகவும், சில மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார் விஜய்.
மத்திய அரசு கல்விக்கென்று ஒதுக்கிய 8,000 கோடி நிதியைத் தமிழகத்திற்கு வழங்காமல் தற்போது வரை இழுத்தடித்து வருகிறது. ஆனால் அந்த 8,000 கோடி நிதியை விஜய் அரசு பெற்றுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதலை விஜய் அவர்கள் ஏற்கனவே மோடியிடம் பெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஊழலற்ற நல்ல அரசு உருவாகியுள்ளது என்று ஆளுநர் கூறியுள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் எந்தவொரு குழப்பமும் இன்றி, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுநர் உரை சட்டசபையில் சுமுகமாக நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு மேலும் மேலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதில் தவெக (TVK) அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விரைவில் சீனா மற்றும் ஐரோப்பா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஒரு வளர்ச்சிப் பாதையை நோக்கி முதல் தடவையாக நகர்கிறது; அதுவும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர்.