பட மூலாதாரம், Vanniarasu/X
"ஒரு ஓட்டுனால என்ன மாறப்போகுது" என்ற விஜய் படத்தின் வரிகள் இன்று அவரது கட்சி வேட்பாளருக்கே அந்த ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 108 இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான 118 என்ற இலக்கை அவரால் அடைய முடியவில்லை. இதற்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் பலர் ஆயிரம் வாக்குகளுக்கும் கீழ் தோற்றதும் முக்கிய காரணமாக மாறியுள்ளது.
தவெக மட்டுமல்லாமல் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்த ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வெற்றியையும் தோல்வியையும் வழங்கியுள்ளது.
குறைந்த வாக்கும்… அதிக வாக்கும்…

பட மூலாதாரம், EdappadiPalanisamy/X
சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வென்றுள்ளன.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 98110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி பெற்ற வெற்றி, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது.
ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் யார்?

பட மூலாதாரம், Handout
எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி?

பட மூலாதாரம், TVKHQ/X
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு