← முகப்பு செய்திகள்

ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே? – லக்னௌவுக்கு எதிராக முதலில் பந்துவீச்சு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே? – லக்னௌவுக்கு எதிராக முதலில் பந்துவீச்சு

பட மூலாதாரம், ANI

ஐபிஎல் 2026 தொடரின் 53வது போட்டியில் இன்று (மே 10) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் தலா 5 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அதில் 3 மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 6 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணியால் ஐந்தாவது இடத்துக்கு முன்னேற முடியும்.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லக்னௌ அணியில் ஜாஷ் இங்லிஸ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்படுவதாக ரிஷப் பன்ட் டாஸில் தெரிவித்தார்.

டாஸில் கேப்டன்கள் சொன்னது என்ன?

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். இதற்கு எளிய காரணம், ஆடுகளம் நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்தது மற்றும் மழையும் பெய்து கொண்டிருந்தது, எனவே இதில் விசேஷமாக ஒன்றுமில்லை. இதற்கு முந்தைய பகல் நேரப் போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆடுகளம் மிகவும் மாறுபட்டு இருந்ததாக நான் கருதினேன். ஆனால் எங்கள் வேலை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டு மற்றவற்றைச் செய்வதுதான். முதலில் பந்துவீசுவதால், ஆரம்ப ஒரு சில ஓவர்களைக் கவனித்துவிட்டு, அதன்பிறகு அவர்களை எவ்வளவு சீக்கிரம் சுருட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுருட்டப் பார்ப்போம்.” என்று கூறினார்.

லக்னௌ கேப்டன் பன்ட், “நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்திருந்தோம். இங்கிருந்து ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் முக்கியமானதாகவே கருதுகிறோம். அதே நேரத்தில், நாங்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். தற்போதைக்குத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். பல போட்டிகளில் எங்களுக்குச் சாதகமான தருணங்களும் வாய்ப்புகளும் கிடைத்தன, ஆனால் எங்களால் வெற்றிகரமாகப் போட்டியை முடிக்க முடியவில்லை. அதுதான் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் – தொடரில் அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும்போது, நான் மும்பையில் சொன்னது போல, ஒவ்வொரு போட்டியிலும் முடிவைப் பொருட்படுத்தாமல் எங்களது 200% உழைப்பைக் கொடுப்போம். அதைத்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம்.” என்றார்.

பிளேயிங் லெவனில் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே அணியில்

பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: மேத்யூ ஷார்ட், பிரஷாந்த் வீர், குர்ஜப்னீத் சிங், சர்ஃபராஸ் கான், ஆகாஷ் மத்வால்.

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்தப் போட்டிக்கான எல்எஸ்ஜி அணியின் பிளேயிங் லெவனுக்கு ஜாஷ் இங்லிஸ் மீண்டும் திரும்பினார்.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், ஜாஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அக்‌ஷத் ரகுவன்ஷி, ஹிம்மத் சிங், ஷபாஸ் அஹமது, மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ராதி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: எம்.சித்தார்த், ஆவேஷ் கான், மயாங்க் யாதவ், முகுல் சவுத்ரி, அப்துல் சமத்.

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net