← முகப்பு தலையங்கம்

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று (மார்ச் 12) காலை

🕐 12 Mar 2026 📂 தலையங்கம் 26 பார்வைகள்
ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று (மார்ச் 12) காலை

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று (மார்ச் 12) காலை 11 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்.

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று (மார்ச் 12) காலை 11 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்.

டிக்கோயா பகுதியிலிருந்து டயகம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் சாரதி உட்பட மூவர் பயணித்திருந்தனர். அவர்கள் தோட்டப் பகுதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். முச்சக்கரவண்டிக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளத்தில் விழுந்த வாகனத்தை மீட்க முயன்ற போது அது மீண்டும் கீழே உருண்டு செல்லும் அபாயம் ஏற்பட்டது. அதில் அருகில் நின்ற நபர் ஒருவர் கடைசியில் உயிர் தப்பியுள்ளார்.

அதிக வேகம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ள ஹட்டன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
04 Jun 2026
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net