← முகப்பு செய்திகள்

ஹங்குரங்கெத்த, வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கடை போன்ற பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமித்து வருவதால் காய்கறி

🕐 3 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 2 பார்வைகள்
ஹங்குரங்கெத்த, வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கடை போன்ற பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமித்து வருவதால் காய்கறி
ஹங்குரங்கெத்த உள்ளிட்ட பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிப்பு!

ஹங்குரங்கெத்த, வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கடை போன்ற பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமித்து வருவதால் காய்கறி மற்றும் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக காய்கறி மற்றும் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுளவர்களது கூட்டு அமைப்பு தெரிவிக்கயில்,

இந்தக் குரங்குகள் கூட்டம் பயிரிடப்பட்ட நிலங்களில் ஊடுருவி, காய்கறி மற்றும் பயிர்களை முற்றிலுமாக அழித்து வருகின்றன. இந்தக் குரங்குகளை விரட்டியடிக்க அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மலையகப் ப்பகுதிகளில் காய்கறி உற்பத்தி முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு நடந்தால் காய்கறிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம் எனத்தெரிவிக்கிறது.

கண்டி பிரதேச குரங்குகள் பிடிக்கப்பட்டு ரந்தெனிகல காப்பகத்தில் விடப்பட்டதால் அங்கு அவை பெருகி எண்ணிக்கை அதிகரித்து, இவ்வாறு சேதம் விளைவிக்கின்றன.

நிலத்தைத் பன்படுத்தி தயார் செய்து உரமிட பல்லாயிரம் ரூபாக்களை செலவிடப்படுகிறது. இருந்த போதிலும், குரங்குகள் ஒரு சில நொடிப்பொழுதில் அவற்றை அழித்து விடுகின்றன.

அரசு பெறுமளவு பணத்தைச் செலவழித்து, நடவடிக்கைகள் எடுத்தபோதும் அவை குறிப்பிட்ட அளவு பலனளிக்கவில்லை, இது தொடர்பாக அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், மலைப்பகுதி காய்கறிகள் முற்றிலுமாக அழிந்துபோகும் நிலை ஏற்படக்கூடும்.

ஏற்கனவே காய்கறிகள், வாழை, பலா, மற்றும் தெங்கு போன்ற பயிர்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு வனவிலங்கு மற்றும் விவசாயத் துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என மலையகப்பகுதி விவசாயிகள் வேண்டுகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net