← முகப்பு தமிழ்

வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது – யாழ்.போதனாவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தவர்களுக்கு ஆளுநர் பாராட்டு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 128 பார்வைகள்
வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது – யாழ்.போதனாவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தவர்களுக்கு ஆளுநர் பாராட்டு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு , வைத்தியசாலை பணிப்பாளரிடம் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார்.

இதன்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு ஆளுநர் நேரில் சென்று தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

'பெரும் சேதத்தைத் தணிப்பதற்கு நீங்கள் எடுத்த இந்த வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது' என தீயணைப்பு வீரர்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அத்துடன், இத்தீயைக் கட்டுப்படுத்தும் கூட்டு முயற்சியில் உடனடியாகச் செயற்பட்டுச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் தனது கௌரவத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் இணைந்து செயலாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஆளுநர் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net