← முகப்பு செய்திகள்

விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கினார். கணவன் மனைவி இடையே

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கினார். கணவன் மனைவி இடையே
மீண்டும் ‘தலைவன் தலைவி’ கூட்டணி இணைகிறது

விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கினார். கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாண்டிராஜ் இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இயக்குநர் பாண்டிராஜ், ‘பரிமளா & கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்ததி, யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின், சாண்டி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துளளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net